பெயின்டரை தாக்கிய வெல்டருக்கு வலை

Added : பிப் 12, 2020
Advertisement

நெட்டப்பாக்கம்;கரியமாணிக்கத்தில் பெயிண்டரை உருட்டு கட்டையால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரியமாணிக்கம் காலனியை சேர்ந்தவர் சங்கர், 30, பெயிண்டர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன்,29, வெல்டர். சங்கர் புதிதாக கட்டி வரும் வீட்டின் படிக்கட்டு பகுதி முருகன் வீட்டை ஒட்டி சென்றது. இதனை முருகன் கண்டிக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த முருகன், சங்கர் மற்றும் அவரது சகோதரியை உருட்டு கட்டையால் தாக்கினார். அதில் காயமடைந்த சங்கர் நெட்டப் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X