சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல்

Added : பிப் 12, 2020
Advertisement
 சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல்

உடுமலை:உடுமலை-ஆனைமலை ரோட்டில், தேவனுார்புதுார் அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இப்பகுதிக்கு, பொள்ளாச்சி, உடுமலையிலிருந்து, 20க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், ஆழியாறு, வால்பாறை உட்பட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த ரோட்டிலேயே செல்கின்றன.

தேவனுார்புதுாரில், ஆனைமலை மற்றும் செல்லப்பம்பாளையம் ரோடு சந்திக்கும் பகுதி உள்ளது.இந்த மூன்று ரோடு சந்திப்பில், பொள்ளாச்சி பகுதியிலிருந்து தேவனுார்புதுாருக்கு இயக்கப்படும் பஸ்கள் சிறிது நேரம் நிறுத்தப்படுகின்றன. ஆனைமலை வழித்தடத்தில் இயங்கும் பஸ்கள், பயணிகளை ஏற்றி செல்கின்றன. குறுகலான ரோட்டில், பஸ்கள் நிறுத்தப் படுவதால், அப்பகுதியில் நெரிசல் நிரந்தரமாக உள்ளது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சமீபத்தில், ரோடு சந்திப்பு விரிவாக்க பணியின் போது, தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குறுகிய நாட்களில் மீண்டும், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, மேற்குப்பகுதிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில், கடைகள் அமைத்துள்ளனர்.

இதனால், பஸ்கள் ஆனைமலை ரோட்டின் மத்தியில் நிற்க வேண்டியுள்ளது. அப்போது, பிற வாகனங்கள் விலகி செல்ல முடியாது; எதிர்புறத்திலும் வாகனங்கள் செல்வதும் தடைபடுகிறது. ஆக்கிரமிப்பு கடைகளுக்கும், பஸ்களுக்கும் இடையிலான பகுதியில் பயணிகள் நிற்க வேண்டியுள்ளது; நிழற்கூரையும் அங்கு இல்லை.

பொள்ளாச்சியிலிருந்து வரும் பஸ்கள் திரும்புவதற்கு போதிய இடவசதியில்லை; உடுமலைக்கு செல்லும் பஸ்களில் ஏற, ரோட்டை கடக்கும் பயணிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். சந்திப்பு பகுதியில், நெரிசலும் நிரந்தரமாகி, காலை மற்றும் மாலை நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி நிர்வாகம், தளி போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X