பொது செய்தி

இந்தியா

காமராஜர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுவிழா

Added : பிப் 12, 2020
Advertisement
 காமராஜர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுவிழா

திருபுவனை;கல்லுாரிகளுக்கு இடையே நடந்த விளையாட்டு போட்டிகளில் கபடி மற்றும் கைப்பந்து போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், 'புதுச்சேரி கலை விளையாட்டு சங்கமம் 2020' என்ற தலைப்பில் கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் நடந்தது.இதில் கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி மாணவர்கள் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றனர். ஆணழகன் போட்டியில், பி.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர் விஜய ரகுநாதன் இரண்டாம் பரிசு பெற்றார். மேலும், இக்கல்லுாரி மாணவர்கள் ரிலே மற்றும் மராத்தான் போட்டிகளில் பரிசு பெற்றனர்.அதனையொட்டி கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் பாபு பாராட்டினார்.நிகழ்ச்சியில் கபடி பயிற்சியாளர் கதிர்வேல், கைப்பந்து பயிற்சியாளர் ஆண்டனிஜோசப், ரிலே பயிற்சியாளர் ஆதவன், கலை நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் சவுந்தரவள்ளி, உதவி பேராசிரியர் அரிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X