கிராமத்தை பாழாக்கும் 'சில்லிங்' மது விற்பனை!

Added : பிப் 12, 2020
Advertisement

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வல்லக்குண்டாபுரம். இங்கு, சட்டவிரோதமாக, மது, விற்பனை செய்து வருகின்றனர்.

'டாஸ்மாக்' மதுக்கடைகளில் இருந்து, மொத்தமாக மது வகைகளை வாங்கி வந்து, வீட்டில் வைத்து, விற்பனை செய்கின்றனர். கிராமத்தில், 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பதால், பலர் குடிபழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.அரசுப்பள்ளி வளாகம் உட்பட பொது இடங்கள் அனைத்தும், இரவு நேரங்களில், திறந்தவெளி 'பார்' ஆக மாறிவிட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள், குடிமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. குடியரசு தினத்தன்று, நடந்த கிராம சபையில், 'சில்லிங்' மதுவிற்பனையை தடுத்து குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.இத்தீர்மானம், குடிமங்கலம் போலீசாரிடமும், கோரிக்கை மனுவாக சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சில நாட்கள், கிராமத்தில், மது விற்பனை தடைபட்டிருந்தது.

தற்போது, மீண்டும், 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. இது குறித்து வல்லக்குண்டாபுரம் கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கிராமத்தில், சட்டவிரோத மதுவிற்பனையால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குறித்து, குடிமங்கலம் போலீசாருக்கு தெரியும். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். மாறாக, புகார் தெரிவிப்பவர்களை மிரட்டும் வகையில், வீடுகளில் புகுந்து, சோதனை நடத்துவோம் என மிரட்டுகின்றனர். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், போலீசார் செயல்பாடு உள்ளது. இது குறித்து, உடனடி நடவடிக்கை எடுத்து, கிராம மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X