டில்லியில் துப்பாக்கிச்சூட்டில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.உயிர்தப்பினார்:ஒருவர் பலி

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (16)
Advertisement
டில்லியில் துப்பாக்கிச்சூட்டில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.உயிர்தப்பினார்:ஒருவர் பலி

புதுடில்லி: டில்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். கட்சி தொண்டர் ஒருவர் பலியானார்.

டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் டில்லி மெஹரூலி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேஷ் யாதவ் என்ற எம்.எல்.ஏ. தேர்தலில் பெற்ற வெற்றிக்காக கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார்.
அருணா ஆசிப் அலிகான் மார்க்சாலை வந்த போது மர்ம நபர்கள் எம்.எல்.ஏ. மீது துப்பாக்கியால் 4 ரவுண்டுகள் சுட்டனர். இதில் எம்.எல்.ஏ. காயமின்றி உயிர்தப்பினார். கட்சி தொண்டர் அசோக் மான் என்பவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.


சி.சி.டி.வி. யில் பதிவு ?உயிர்தப்பிய எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் கூறுகையில், தேர்தலில் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாமல் என்னை கொல்ல சதி செய்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா உள்ளது. இதில் கொலையாளிகள் உருவம் பதிவாகியிருக்கும் இதை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலைமை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி என்றார்.


கண்டனம்எம்.எல்.ஏ. மீது நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எம்.எல்.ஏ. மீது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்ட நபர் யார் என்பது குறித்து டில்லி போலீசார் அடையாளம் தெரியாத நபர் மீது எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-பிப்-202013:51:06 IST Report Abuse
Ab Cd மத்திய அரசு இந்துத்துவ தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. பசுவுக்காக கொலை செய்த போதே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இது இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்காது
Rate this:
Share this comment
Nalla Paiyan - karaikal,இந்தியா
12-பிப்-202015:19:39 IST Report Abuse
Nalla Paiyanதஆ.....ஊ......ன்னா சில பயங்கரவாத கேணப்பயலுங்க மத்திய அரசுமேல் குற்றஞ்சாட்டக் கிளம்பிடறானுங்க.......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-பிப்-202019:16:03 IST Report Abuse
தமிழ்வேல் ஆட்டக் கடிச்சி... மாட்டைக் கடிச்சி, இப்போ மனுஷனை கடிக்கிறானுவோ.....
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-பிப்-202013:48:40 IST Report Abuse
Ab Cd துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து கொண்டே போகிறது, துப்பாக்கியை வைத்து ஆயுத பூசை நடத்தும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-பிப்-202013:03:47 IST Report Abuse
தமிழ்வேல் மர்ம நபர். போராட்டத்தில் சுட்டதும், பல்கலையில் புகுந்து கண்ணில் கண்டவர்களை அடித்து நொறுக்கியவர்களும் மர்ம நபர்களே.. அந்த மர்ம நபர்கள்( யார் என்று தெரியாது) இன்னும் வெளியில் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-பிப்-202014:30:54 IST Report Abuse
Ab Cdகூடிய சீக்கிரம் அந்த மர்ம நபர்கள் பீகாரில் MLA ஆக வளம் வருவார்கள் . இதுவே MLA ஆக குறைந்த பச்ச தகுதி...
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-பிப்-202014:35:50 IST Report Abuse
Ab Cdமக்கள் bjp கட்சியின் மீது கடும் கோபமாக இருக்கிறார்கள். அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டிர்கள். ஆம் ஆத்மி பயன்படுத்தி கொண்டார்கள்...
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-பிப்-202014:37:54 IST Report Abuse
Ab Cdஇபோது கூட கார்க்கி கல்லூரியில் இந்த கயவர்கள் செய்த செயல் மிக கேவலமானது. அதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று கண்டிக்க ஏன் தயங்குகிறீகள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X