பொது செய்தி

தமிழ்நாடு

பறக்குது வாகனங்கள்; பலியாகுது உயிரினங்கள்: வனப்பகுதி ரோட்டில் கண்காணிப்பு அவசியம்

Added : பிப் 12, 2020
Advertisement
 பறக்குது வாகனங்கள்; பலியாகுது உயிரினங்கள்: வனப்பகுதி ரோட்டில் கண்காணிப்பு அவசியம்

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும், உடுமலை- மூணாறு ரோட்டில், அதிவேக வாகனங்களால், ஏராளமான சிறு வன உயிரினங்கள் பலியாகி வருகின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகம், யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு என 300க்கும் மேற்பட்ட வன விலங்குகள், தாவரங்கள், மரங்கள், பறவைகள், சிறு உயிரினங்கள், நுண் உயிரினங்கள் என, அரிய வகை பல்லுயிரினங்கள் வசிக்கும் உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ளது.

இதில், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் மற்றும் கேரளா மாநிலம் சின்னாறு வன கோட்டம் வழியாக செல்லும், உடுமலை - மூணாறு ரோடு, 90 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது.உடுமலை, ஒன்பதாறு செக்போஸ்ட் முதல், சின்னாறு வரை, தமிழக வன எல்லையாக உள்ளது.ரோட்டில் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன.

அரிய வகை உயிர்ச்சூழல் மண்டலத்தில், ஏராளமான வன விலங்குகள், சிறு உயிரினங்கள் ரோட்டை கடக்கும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வு இல்லாதது மற்றும் அலட்சியம் காரணமாக, வாகனங்களில் அடிபட்டு, ஏராளமான உயிரினங்கள் கொல்லப்பட்டு வருகின்றன. சிற்றினங்கள் பாதுகாப்புக்கான ஆராய்ச்சிகளும், பரிந்துரைகளும், முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. இதனால், கோடை மற்றும் மழைக்காலத்தில், சிற்றினங்களின் உயிரிழப்பு அதிகம் காணப்படுகிறது.

இந்த ரோட்டில், ரோட்டை கடக்க முயலும் அரிய வகை தவளைகளும், பச்சோந்தி, பறவைகள், பாம்புகள், மான், கேளையாடு, மலபார் அணில், புனுகுப்பூனை என ஏராளமான அரிய வகை உயிரினங்கள் பலியாகின்றன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது :வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள், நீர் தேடி, அமராவதி அணைக்கு வருகின்றன. ரோட்டை கடக்கும் போது, வாகனங்களில் வருபவர்களால் துன்புறுத்தப்படுகிறது. யானைகள், வாகனங்களை துரத்தும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

வாகனங்களில் செல்பவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிவேகமாக வாகனங்கள் ஒட்டுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X