நித்யானந்தா சீடர் கொலை வழக்கு சரணடைந்தவர்கள் பகீர் தகவல்

Added : பிப் 12, 2020
Advertisement

வில்லியனுார்:நித்தியானந்தா சீடர் வஜ்ரவேலை, அவரது உறவினர் துாண்டுதலின் பேரில் ரவுடிகள் கடத்தி படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது.
ஏம்பலம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வஜ்ரவேல்,51; ஏம்பலம் நித்தியானந்தா ஆசிரமத்தின் பிரதான சீடரான இவர், வில்லியனுார் மற்றும் ஏம்பலத்தில் பேக்கரி நடத்தி வந்தார். கடந்த 28ம் தேதி இரவு செம்பியர்பாளையத்தில் இருந்து ஏம்பலத்திற்கு காரில் புறப்பட்டவர் மாயமானார். மறுநாள், குருவிநத்தம் சமுதாய நலக்கூடம் அருகே அவரது காரில் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், வஜ்ரவேலுவின் உறவினரான ஆனந்து, இளையரசன் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவந்தனர்.இந்நிலையில், கணுவாப்பேட்டை ரவுடி அய்யனார் உள்ளிட்ட 7 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை கோர்ட் அனுமதியுடன் கடந்த 7ம் தேதி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.அதில், வஜ்ரவேலுவின் பெரிய மாமியார் வசந்தா, பண்ருட்டி அடுத்த கவரப்பட்டை சேர்ந்த பிரகாஷ்-பிரியா தம்பதியரிடம் சீட்டு கட்டி வந்தார். சீட்டு முடிந்த நிலையில் பிரகாஷ் தம்பதியினர் ரூ.12 லட்சம் பணத்தை கொடுக்காமல் வஜ்ரவேலுவிடம் அடைக்கலமாயினர்.அதனை அறிந்த வசந்தா தனது மருமகன் ஆனந்திடம் தெரிவித்துள்ளார். அவர், தனது நண்பரான கணுவாப்பேட்டை ரவுடி அய்யனாரிடம் கூறி, மிரட்டி பணத்தை வாங்கி கொடுத்தால் பணம் தருவதாக கூறினார்.
அதன்பேரில் அய்யனார், பிரகாசிடம் பணத்தை வாங்கி தருமாறு வஜ்ரவேலுவை மிரட்டினார். அவரும் ஒரு வாரத்தில் பணத்தை வாங்கி தருவதாக கூறினார். ஆனால், அதன்படி பணத்தை வாங்கி தராததால், ஆத்திரமடைந்த அய்யனார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, காரில் தனியாக வந்த வஜ்ரவேலுவை கடத்தி சென்று பிள்ளைச்சாவடி சுடுகாடு பகுதியில் வைத்து பணம் கேட்டு தாக்கினர். அதில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். உடன் அவரது உடலை காரில் ஏற்றிக் கொண்டு, புதுச்சேரி, தவளகுப்பம் வழியாக பாகூர் சென்று காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து பண்ருட்டி வழியாக மதுரைக்கு சென்றதும். மேலும் வஜ்ரவேல் காரில் வைத்திருந்த ரூ.2.34 லட்சம் பணத்தை எடுத்து புதுக்கடையை சேர்ந்த பார்த்தசாரதியிடம் கொடுத்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ஏழு பேரையும் நேற்று முன்தினம் மீண்டும் கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வஜ்ரவேலுவின் பணத்தை வைத்துள்ள பார்த்தசாரதியை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X