தனியார் பள்ளி ஊழியர்கள் தர்ணா

Added : பிப் 12, 2020
Advertisement
 தனியார் பள்ளி ஊழியர்கள் தர்ணா

புதுச்சேரி;தனியார் பள்ளி ஊழியர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளத்தினர் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் தலைமை தபால் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு தனியார் பள்ளி ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் கிறிஸ்தோபர் தலைமை தாங்கினார். மா.கம்யூ., நிர்வாகி முருகன் வாழ்த்தி பேசினார்.அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன், பிரேமதாசன், பொதுச் செயலர் ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர்கள் வாழ்த்தி பேசினர்.தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். தர்ணா போராட்டத்தில் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X