நியமன விதிகள் திருத்த விவகாரம் முதல்வருடன் பேச்சவார்த்தை

Added : பிப் 12, 2020
Advertisement
 நியமன விதிகள் திருத்த விவகாரம் முதல்வருடன் பேச்சவார்த்தை

புதுச்சேரி:அமைச்சக உதவியாளர் நியமன விதிகள் தொடர்பாக, முதல்வருடன் ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமைச்சக உதவியாளர் பதவிகளுக்கான நியமன விதிகள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருத்தப்பட்டது. அதாவது, 60 சதவீதம் பதவிகளை சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு மூலமாக நிரப்புவது என்றும், 20 சதவீத பதவிகளை போட்டித் தேர்வு மூலமாகவும், 20 சதவீத பதவிகளை நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்புவது எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கிடப்பில் போடப்பட்டிருந்த அமைச்சக உதவியாளர் நியமன விதிகள் திருத்தத்துக்கு தற்போது புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் பதவிகளை போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவதற்கு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை நடவடிக்கை மேற்கொண்டது.அமைச்சக உதவியாளர் நியமன விதிகள் திருத்தத்துக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், முதல்வர் நாராயணசாமியை, ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வரின் பார்லிமெண்ட் செயலர் லட்சுமிநாராயணன், பிப்டிக் சேர்மன் சிவா, அபிவிருத்தி ஆணையர் அன்பரசு, சார்பு செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.நியமன விதிகள் திருத்தத்தால் இளநிலை எழுத்தர், மேல்நிலை எழுத்தர்கள் பாதிக்கப்படுவர் என்றும், போட்டி தேர்வு மூலமாக உதவியாளர் பதவிகளை நிரப்புவதையும், நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதையும் ரத்து செய்ய வேண்டும் என்று சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து, ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறும்போது, 'போட்டி தேர்வு நடத்துவதை ரத்து செய்வதாகவும், பதவி உயர்வு மூலமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் உறுதியளித்தார். நேரடி நியமனத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வரை மீண்டும் சந்தித்து பேச உள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X