தென்னந்தோப்பை சூறையாடும் மர நாய்கள்! கட்டுப்படுத்த வழியின்றி போராட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement
 தென்னந்தோப்பை சூறையாடும் மர நாய்கள்! கட்டுப்படுத்த வழியின்றி போராட்டம்

உடுமலை:தென்னை மரங்களில், இளநீர்களை மட்டும் குறிவைத்து சேதப்படுத்தும், மரநாய் உட்பட விலங்கினங்களால், மகசூல் வெகுவாக குறைந்து அவற்றை கட்டுப்படுத்த முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது. மரங்களில், பருவநிலை மாற்றங்களால், வெள்ளை ஈ தாக்குதல், வண்டுகளால் சேதம் உட்பட பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளன.இந்நிலையில், சமீபகாலமாக இளநீர்களை மட்டும் குறிவைத்து காலி செய்யும், விலங்கினங்களால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

அதிக இழப்பு

தென்னை மரங்களில், அணில் மற்றும் எலிகளால், குரும்பைகள் சேதமடைவது வழக்கமாக இருந்தது. தற்போது, மரநாய் மற்றும் மரபூனை எனப்படும் கீரி வகையை சேர்ந்த விலங்கு, தென்னந்தோப்புகளில், கடுமையான சேதம் ஏற்படுத்தி வருகிறது. தென்னை மரங்களிலுள்ள, இளநீர் குலைகளை தேர்வு செய்து, அவற்றை வட்ட வடிவில், துளையிட்டு, நீரை குடித்து விட்டு, காய்களை கீழே தள்ளி விடுகின்றன. ஒரு மரத்தில், 10 இளநீர் வரை, நாளொன்றுக்கு, மரநாய்கள் சேதப்படுத்துகின்றன. இதனால், ஏக்கருக்கு, 2 ஆயிரம் தேங்காய்கள் வரை மகசூல் குறைந்து, விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் மட்டும், இவ்வகை விலங்குகள் நடமாடுகின்றன. எளிதாக ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்துக்கு தாவி சுற்றுப்பகுதிகளிலுள்ள அனைத்து தோப்புகளுக்கும் இடம் பெயர்ந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர்.

தென்னை விவசாயிகள் கூறியதாவது: தென்னை சாகுபடியில், பாதிப்புகள் தொடர்கதையாகி விட்டது. வெள்ளை ஈ தாக்குதல் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள், மரநாய்கள் பிரச்னை அதிகரித்துள்ளது. பகலில் இவ்விலங்குகள் நடமாட்டம் இருப்பதில்லை. தற்காலிக தீர்வாக, மரங்களில், உரச்சாக்குகளை கட்டி வைத்துள்ளோம். மரநாய்கள் மரங்களின் மீது ஏறும் போது, சாக்குகள் இடையூறு ஏற்படுத்துவதால், அவை திரும்பி சென்று விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதன் அடிப்படையில், அனைத்து மரங்களுக்கும், தண்டு பகுதியில், சாக்கு கட்டி வைத்து உள்ளோம். தென்னை மரங்களில், 40 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் அறுவடை செய்கிறோம். மரநாய்கள் தாக்குதலால், ஆயிரக்கணக்கான தேங்காய்கள் இழப்பு ஏற்படுகிறது. வேளாண்துறையினர், தென்னை வளர்ச்சி வாரியத்தினர் இப்பிரச்னையை கட்டுப்படுத்த உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X