பொது செய்தி

இந்தியா

கால்நடை வளர்ப்பில் மதிப்பு கூட்டல் கருத்தரங்கம்

Added : பிப் 12, 2020
Advertisement
 கால்நடை வளர்ப்பில் மதிப்பு கூட்டல் கருத்தரங்கம்

புதுச்சேரி:புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் மதிப்பு கூட்டல் குறித்து கருத்தரங்கம் நடந்தது.
குருமாம்பேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்த கருத்தரங்கிற்கு அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். நபார்டு வங்கி மேலாளர் உமா குருமூர்த்தி கருத்தரங்கை துவக்கி வைத்தார். சிண்டிகேட் வங்கி வேலுார் விவசாய அபிவிருத்தி மேலாளர் ரேவதி, விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கு விவசாயம் மற்றும் கால்நடை பொருள்களில் மதிப்பூட்டுதலுக்கு வங்கிகளின் பங்கு குறித்து பேசினார்.புதுச்சேரி, கடலுார் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய துணை பயிற்றுனர் பொம்மி, வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் பற்றியும், திட்ட உதவியாளர் சித்ரா கால்நடை வளர்ப்பு பற்றியும் பேசினர்.கூட்டத்தின்போது, 15 சுய உதவிக்குழுக்களுக்கு வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் தொழில் செய்வதற்கு ரூ. 50 லட்சம் கடன் வங்கப்பட்டது. திருமாறன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X