பொது செய்தி

தமிழ்நாடு

பரிசு பெற்ற மாணவியர் பாராட்டி ஊக்குவிப்பு

Added : பிப் 12, 2020
Share
Advertisement
 பரிசு பெற்ற மாணவியர் பாராட்டி ஊக்குவிப்பு

அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவியர், திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியில், தங்கள் அறிவியல் படைப்புகளை உருவாக்கி, மாவட்ட அளவில் பரிசு பெற்றனர்.

இவர்களை பாராட்டும் வகையிலும், பிற மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளியில் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியை சிவகாமி, தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, டி.எஸ்.பி., பாஸ்கர், வெற்றி பெற்ற மாணவியருக்கு, பரிசு வழங்கி பேசினார்.

வட்டார கல்வி அலுவலர்கள் ஜஸ்டின்ராஜ், ஜோதி பிரகாஷ், திருவள்ளுவர் அறக்கட்டளை தலைவர் ராமசாமி, அகரம் மக்கள் நல சங்க தலைவர் தேவசுந்தரம், கிழக்கு ரோட்டரி தலைவர் சிவகுமார், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மூர்த்தி, உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள் ராதா, பலராமன் உட்பட பலர் செய்தனர். ஆசிரியை பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X