ஏ.கே.ஆர்., பள்ளியில் விளையாட்டு விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.கே.ஆர்., பள்ளியில் விளையாட்டு விழா 

Added : பிப் 12, 2020
Share

திருப்பூர்:அவிநாசி அருகே அணைப்புதுார், ஏ.கே.ஆர்., அகாடமி, ஏ.கே.ஆர்., மழலையர் பள்ளி விளையாட்டு விழா நடந்தது.ஓட்டம், பந்து சேகரித்தல், தொடர் ஓட்டம், பந்து எறிதல், பந்தை ஊதி தள்ளுதல் உள்ளிட்ட போட்டி பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது.

பரிசளிப்பு விழாவுக்கு பள்ளி தாளாளர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். மழலையர் பள்ளி முதல்வர் கலைமணி வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கினார். பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் மணிமலர் நன்றி கூறினார். பள்ளி நிர்வாக அதிகாரி சுப்ரமணியம் விழாவை ஒருங்கிணைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X