பொது செய்தி

தமிழ்நாடு

'தொழில் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம்' எம்.எஸ்.எம்.இ., துணை இயக்குனர் கருத்து

Added : பிப் 12, 2020
Advertisement
 'தொழில் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம்' எம்.எஸ்.எம்.இ., துணை இயக்குனர் கருத்து

பல்லடம்:தொழில் வளர்ச்சியே ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு காரணம் என, விசைத்தறியாளருக்கான பயிற்சி கூட்டத்தில்,எம்.எஸ்.எம்.இ., துணை இயக்குனர் கருத்து தெரிவித்தார்.

மத்திய அரசு சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டு துறை, மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் சார்பில், விசைத்தறியாளர்களுக்கான ஊக்க பயிற்சி கூட்டம், திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்தது.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, கனரா வங்கி முதன்மை மேலாளர் சிவகுருநாதன் மற்றும் தேசிய சிறுதொழில் கழக மேலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டு துறையின் உதவி இயக்குனர் விஜயகுமார் பேசியதாவது:

ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள், புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கும், மத்திய, மாநில அரசுகள் ஏராளமான திட்டங்கள், சலுகைகளை வழங்குகின்றன. முத்ரா கடன் திட்டம், பி.எம்.இ.ஜி.பி., உள்ளிட்ட திட்டங்கள் மூலம், ஆவணங்கள் இன்றி கடன் பெற்று, தொழிலை விரிவுபடுத்த முடியும்.தொழில் வளர்ச்சியே ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு காரணமாக உள்ளது. தொழிலை இதே நிலையில் வைத்திருக்காமல், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முயற்சிக்க வேண்டும்.

அதன் மூலம், தொழிலில் நீங்கள் முன்னேறுவதுடன், ஜவுளித் துறையும் முன்னேற்றப் பாதையில் செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X