பொது செய்தி

தமிழ்நாடு

'பட்டறிவு, படிப்பறிவு இரண்டுமே முக்கியம்!' பாரதியார் பல்கலை துணைவேந்தர் 'அட்வைஸ்'

Added : பிப் 12, 2020
Advertisement
 'பட்டறிவு, படிப்பறிவு இரண்டுமே முக்கியம்!' பாரதியார் பல்கலை துணைவேந்தர் 'அட்வைஸ்'

திருப்பூர்:'பட்டறிவு, படிப்பறிவு இரண்டையும் சரியான முறையில் பயன்படுத்தினால் பெண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்' என, கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தர் பேசினார்.

திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் பொன் முத்துராமலிங்கம் வரவேற்றார்.கடந்த, 2015 முதல், 2018 வரை, இளநிலை பாடப்பிரிவுகளில், 808 மாணவியருக்கும், முதுகலை பட்டயப்படிப்பில், 203 பேருக்கும் பட்டங்கள் அளிக்கப்பட்டது.

மாணவியருக்கு பட்டம் வழங்கி, பாரதியார் பல்கலை துணை வேந்தர் காளிராஜ் பேசியதாவது: 'பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்' எனும் பாரதியின் கனவை மெய்ப்பித்து கொண்டிருக்கின்றனர் இன்றைய பெண்கள். பெண்களின் ஆற்றலை, திறமையை, மேன்மையை போற்ற வேண்டுமென்ற விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

பட்டறிவு, படிப்பறிவு இரண்டையும் சரியான முறையில் பயன்படுத்தினால் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு, என்ற கேள்வி ஒரு காலத்தில் கேட்கப்பட்டது. படிப்பு தான் பெண்ணுக்கு கொடுக்கும் ஆகப்பெரும் சீதனம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

நல்ல நம்பிக்கையை, மன உறுதியை, செயலாற்றலை, உண்மையை, சகிப்புத்தன்மையை, நன்மை செய்யக்கூடிய ஊக்கத்தை கல்வி கற்றுக்கொடுக்கிறது. உலக வரலாற்றில் மிகச்சிறந்த மாற்றங்களை கொண்டுவந்தவர்கள் பெண்கள். நிர்வாகம், தலைமைப்பண்பில் பெண்களுக்கென தனித்துவம் உண்டு. பெண்ணாக பிறந்ததற்கு பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது. எந்த உயரத்தை எட்ட வேண்டுமோ, தொடர்ந்து அதற்கான தேடலை, முயற்சியை செய்யுங்கள். வெற்றி கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X