அறிவிப்பின்றி ரயில் பாதை பராமரிப்பு கூடப்பாக்கத்தில் பயணிகள் கடும் அவதி

Added : பிப் 12, 2020
Share
Advertisement
 அறிவிப்பின்றி ரயில் பாதை பராமரிப்பு கூடப்பாக்கத்தில் பயணிகள் கடும் அவதி

வில்லியனுார்;கூடப்பாக்கம் ரயில்வே கேட்டில் முன் அறிவிப்பின்றி தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொண்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானர்.
அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் செல்லும் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலகுளம், பிச்சைவீரன்பேட், பெரம்பை வழியாக வில்லியனுாருக்கும், வில்லியனுாரில் இருந்து புதுச்சேரி செல்லும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் கூடப்பாக்கம் ரயில்வே கேட் பகுதி வழியாக, பொறையூர், ஊசுட்டேரி, குரும்மாம்பேட், மூலகுளம் வழியாக புதுச்சேரிக்கு சென்று வருகின்றன.இந்நிலையில் கூடப்பாக்கம் ரயில்வே கேட் தண்டவாள பகுதியை மேம்படுத்தும் பணி நடைபெறுவதற்கான எவ்வித முன் அறிவிப்பு செய்யாமலும், போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்காலும் ரயில்வே துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து ரயில்வே கேட்டை தற்காலிகமாக மூடி, சாலையை உடைத்து, தண்டவாள பகுதியை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டனர். காலை 9:00 மணி வரையில் நடந்த இந்த மேம்படுத்தும் பணியால் பயணிகள் பஸ், மாணவர்கள் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்து மாற்று வழியில் திருப்பி விட்டனர்.முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென ரயில்வே கேட்டை மூடி தண்டவாள பகுதியில் மேம்படுத்தும் பணி மேற்கொண்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லுவோர் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X