பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

Added : பிப் 12, 2020
Advertisement

அவிநாசி:- அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்திற்கான, குழாய்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
பவானி ஆற்றின் உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள, வறட்சி நிறைந்த காரமடை, மேட்டுப்பாளையம், அன்னுார், திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி, நம்பியூர் மற்றும் புளியம்பட்டி பகுதிகளில் உள்ள, 31 பெரிய குளங்கள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் 630 குட்டைகளில் நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்தி, தண்ணீர் தட்டுப்பாடை போக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டப்பணிகளை, எல் அண்ட் டி' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இதற்காக அவிநாசி அருகே, சேவூரில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நிலத்தடியில் பதிப்பதற்கு தேவையான குழாய்கள் வரவழைக்கப்பட்டு, எல் அண்ட் டி' அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவற்றை பொதுப்பணித்துறை, அத்திக்கடவு - அவிநாசி திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் பார்வையிட்டு, பணியின் தன்மை குறித்து ஆய்வு செய்து, பிற விவரங்களை கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X