பொது செய்தி

தமிழ்நாடு

அமைதி தவழ்ந்தால் ஆன்மிகம் தழைக்கும்! மனிதநேய பயிற்சியில் கருத்து

Added : பிப் 12, 2020
Share
Advertisement
 அமைதி தவழ்ந்தால் ஆன்மிகம் தழைக்கும்! மனிதநேய பயிற்சியில் கருத்து

திருப்பூர்:கோவில் அமைதியாகவும், சுத்தமாகவும் இருந்தால், பக்தர்கள் மத்தியில் ஆன்மிகம் தழைக்குமென, மனித நேய பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவில் பணியாளருக்கான மனிதநேய பயிற்சி முகாம், மாவட்டம் வாரியாக நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்ட அளவிலான, பயிற்சி முகாம், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று நடந்தது.உதவி கமிஷனர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சீனிவாசன் வரவேற்றார்.

தாராபுரம் ஆஞ்சநேயர் கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத், கோவில் ஆய்வாளர்கள் சுமதி, அபிநயா முன்னிலை வகித்தனர்.கோவில் அர்ச்சகர், பட்டாச்சார்யார்கள், ஓதுவாமூர்த்திகள், கோவில் பூசாரிகள், அலுவலக அலுவலர், துப்புரவு பணியாளர் அனைவரும் பயிற்சியில் பங்கேற்றனர்.

பயிற்சியாளர்கள், முருகானந்தம், கந்தசாமி உள்ளிட்டோர் பயற்சி அளித்தனர்.இதில், பயிற்சியாளர் முருகானந்தம் பேசியதாவது:போபால் விஷவாயு கசிவால் ஊரே பாதிக்கப்பட்ட போது,ஹோமபூஜை செய்து கொண்டிருந்த ஒரு குடும்பம் மட்டும் உயிர் பிழைத்திருந்தது. அந்த அளவுக்கு, யாகசாலையில் இருந்து வரும் புகை, மருத்துவம் கலந்த புனிதமானது.கோவிலில் பணியாற்றும் அனைவருமே, இறைவனுக்கு நேரடியாக சேவையாற்றுகிறீர்கள். உங்களுக்கு, மாத சம்பளத்துடன், இறை கைங்கரியம் செய்த புண்ணியமும் சேரும்.

கோவில் அமைதியாகவும், சுத்தமாகவும் இருந்தால் மட்டுமே, பக்தர்கள் மத்தியில், ஆன்மிகம் தழைக்கும்.இந்தியர்களுக்கு எவ்வித துன்பம் வந்தாலும், கலாச்சாரமும், பண்பாட்டு பழக்க வழக்கங்களும் காத்து கொண்டிருக்கின்றன. கோவிலுக்கு வரும் அனைவரிடமும், கனிவாக பேசி, ஆன்மிகம் பற்றி படர்ந்து வளர ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X