பொது செய்தி

தமிழ்நாடு

31 முதுகலை ஆசிரியருக்கு பணி நியமன ஆணை

Added : பிப் 12, 2020
Advertisement

திருப்பூர்:முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, திருப்பூரை சேர்ந்த 31 பேர் பணி நியமன ஆணை பெற்றனர்.

அரசு மற்றும் அரச உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த செப்., மாதம் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சியடைந்தவர்கள் பட்டியலை தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது.திருப்பூர் மாவட்டத்தில், 31 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. தர எண் அடிப்படையில் ஆன்லைன் மூலம் நடந்த இந்த கலந்தாய்வில் பங்கேற்று விரும்பிய இடங்களை தேர்வு செய்த முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பணி நியமன ஆணை வழங்கினார்.ஆசிரியர்கள் அனைவரும், இன்று பணியில் இணைகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X