கண்டிப்பாக வருவேன்! தனவேலு அறிவிப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

புதுச்சேரி:'சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்வேன்' என, தனவேலு எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தனவேலுவின் எம்.எல்.ஏ., பதவியை பறிக்க வேண்டும் என, சபாநாயகரிடம், அரசு கொறடா அனந்தராமன் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக, ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறு தனவேலுவுக்கு, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.சபாநாயகரின் நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பது குறித்து, சென்னையில் உள்ள சீனியர் வக்கீல்களை நேற்று இரவு சந்தித்து தனவேலு ஆலோசனை நடத்தினார். தனவேலுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன்' என தெரிவித்தார்.ஏற்கனவே, சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பாக பரபரப்பு நிலவி வரும் சூழ்நிலையில், சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தனவேலு எம்.எல்.ஏ., அறிவித்திருப்பது, ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X