பொது செய்தி

இந்தியா

துணை ஜனாதிபதி வருகை

Added : பிப் 12, 2020
Advertisement
 துணை ஜனாதிபதி வருகை

புதுச்சேரி:துணை ஜானதிபதி வெங்கையா நாயுடு புதுச்சேரி வருகையையொட்டி, கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி, பல்கலையின், 28 வது பட்டமளிப்பு விழா வரும் 25 அல்லது 26ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார்.துணை ஜனாதிபதி வருகையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு துறையால் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் அருண் தலைமையில் ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் போலீஸ் சீனியர் எஸ்.பி.க்கள் ராகுல்அல்வால், அகன்ஷா யாதவ், துணை கலெக்டர்கள் சஷ்வத் சோரப் மற்றும் சுதாகர், போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.கூட்டத்தில் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, மின்துறை, விமான நிலையத்துறை அதிகாரிகள், ஜிப்மர் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.விமான நிலையத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரை செல்லும் வழியில் உள்ள சாலை மற்றும் சாலையோரங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், தடுப்பு கட்டைகள் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X