பெண்ணை வெட்டிய வாலிபர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

நெட்டப்பாக்கம்;முன்விரோதத்தில் பெண்ணை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கல்மண்டபத்தை சேர்ந்தவர் குணாளன் மனைவி பூரணி,42; அரசு பள்ளி அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன், பக்கத்து வீட்டை சேர்ந்த சிலம்பரசன்,28; குப்பை கொட்டினார். அதனை பூரணி கண்டித்தார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து பூரணி கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசன் மீது நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்தனர்.இதனால், ஆத்திரமடைந்த சிலம்பரசனின் தம்பி கவியரசு,27; கடந்த 9ம் தேதி இரவு கடைக்கு சென்ற பூரணியை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். படுகாயமடைந்த பூரணி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேரக்கப்பட்டார்.நெட்டப்பாக்கம்போலீசார் வழக்கு பதிந்து, கவியரசை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X