மக்கள் நலனிற்கு சட்டசபையை பயன்படுத்த வேண்டும்

Added : பிப் 12, 2020
Advertisement

புதுச்சேரி:எதிர்க்கட்சி தலைவரின் கடமை சாலையில் இறங்கி சண்டை போடுவதா என ஆட்சியாளர்களுக்கு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:தமிழக விவசாயிகளின் நலன் காக்க தஞ்சை, நாகை உள்ளிட்ட காவிரி படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு புதுச்சேரி அ.தி.மு.க., பாராட்டை தெரிவித்து கொள்கிறது. மத்தியில் தி.மு.க., தயவில் காங்., ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் நலனுக்கு எதிரான திட்டங்களுக்கு அனுமதி அளித்ததால் ஏற்பட இருந்த பேராபத்து, தமிழக முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பால் தவிர்க்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் தி.மு.க., துணையோடு ஆட்சி நடத்தும் காங்., அரசு, தமிழக அரசை பின்பற்றி காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்டசிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் நலன் காக்க கட்சி தலைமையின் அனுமதி பெற்று காரைக்காலில் அ.தி.மு.க.,மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தும்.காங்., ஆட்சி அமைத்து நான்காண்டாகிறது. ஆனால் தேர்தல் அறிவிப்புகள், சட்டசபை அறிவிப்புகள் எதையும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி தற்போது நிலவி வரும் அரசின் செயல்பாடுகள் பற்றி கருத்து கூறியுள்ளார்.இதற்கு காங்., தலைவரான, அமைச்சர் நமச்சிவாயம் எதிர்க்கட்சி தலைவர் அவரது கடமையை செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். எத்தனை காலம் தான் இதே பல்லவியை ஆட்சியாளர்கள் கூறுவார்கள். அவர் சரியாக செயல்டவில்லை என்றுதான் மக்கள் உங்களிடம் ஆட்சியை கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சாலையில் இறங்கி சண்டை போட வேண்டுமா? அரசின் செயல்படாத தன்மையை எடுத்துதான் கூற முடியும்.நாளை (இன்று) காலை 9.30க்கு சிறப்பு சட்டசபை கூட்டப்பட உள்ளது. ஆனால் இதுவரை சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை, உறுப்பினர்களுக்கு அலுவல் நடைமுறையும் தெரிவிக்கப்படவில்லை. தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால், அதுகுறித்து குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால் முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் வகையில் செயல்படுகிறார். திட்டமிட்டு சட்டமன்ற உறுப்பினர்களை கேவலப்படுத்தும் வகையில் முதல்வரின் செயல்பாடு உள்ளது.வேலைவாய்ப்பின்மை, இலவச அரிசி வழங்காதது, பஞ்சாலைகள் மூடல், அறிவிப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது போன்ற பல்வேறு விஷயங்கள் சட்டசபையில் பேச வேண்டியுள்ளது. முதல்வர் நாராயணசாமி வெற்று அரசியல் செய்வதை விட்டு,ஆக்கப்பூர்வமாக, மக்கள் நலனிற்காக சட்டசபையை பயன்படுத்த வேண்டும்.ஆளும் கட்சி எம்.எல்.ஏ., தனவேலு முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு பதில் அளிக்கவில்லை. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரமுடியாது என கவர்னர் கூறியுள்ளார். இதற்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X