ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை எப்போதுதான் துவக்குவீர்கள் ? எம்.எல்.ஏ.,க்கள் சரமாரி கேள்வி; வெளிநடப்பு

Added : பிப் 12, 2020
Advertisement
 ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை எப்போதுதான் துவக்குவீர்கள் ?  எம்.எல்.ஏ.,க்கள் சரமாரி கேள்வி; வெளிநடப்பு

புதுச்சேரி:புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை எப்போதுதான் துவக்குவீர்கள், ஏன் காலதாம் செய்கிறீர்கள் என, சரமாரியாக கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ.க்கள், வெளிநடப்பிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அரசு சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நகர்புற மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் தலைமை செயலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். திட்டம் செயல்படுத்தப்பட உள்ள தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்களான லட்சுமிநாராயணன், சிவா, ஜெயமூர்த்தி, அன்பழகன், பாஸ்கர் மற்றும் வளர்ச்சி ஆணையர் அன்பரசு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை செயலர் அதிகாரி அர்ஜூன் சர்மா, இணை அதிகாரி மாணிக்க தீபன், திட்ட இயக்குனர்கள் அசோக்குமார், ஸ்ரண், தேவேசிங், பூர்வா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியபோது வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவரான தலைமை செயலர் அஸ்வனிகுமார், கவர்னர் அழைத்துள்ளதாகவும், 10 நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் அமைச்சரிடம் கூறிவிட்டு சென்றார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூட்டத்தை துவக்கி வைத்தார்.அப்போது பேசிய தி.மு.க., எம்.எல்.ஏ., சிவா, புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்து இரண்டாண்டு ஆகிறது. இதுவரை செய்துள்ள பணிகள் என்ன, எந்தந்த பணிகளை செய்யப்போகிறீர்கள். பல மாநிலங்களில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆலோசனை கூட்டம் மட்டும்தான் நடக்கிறது. பணிகள் துவங்கியதாக தெரியவில்லை. எப்போதுதான் துவக்குவீர்கள். பணம் ரூ. 160 கோடி உள்ளதாக கூறுகிறீர்கள். ஏன் பணியை துவக்க கூடாது என்றார்.
அடுத்து பேசிய காங்., எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி, எனது தொகுதியில் எந்தெந்த பணிகள் செய்யப்போகிறீர்கள் என, எனக்கே தெரியவில்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஏன் துவக்கவில்லை என்றார். இதே கருத்தை எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர் ஆகியோர் வலியுறுத்தினர்.
அப்போது, லட்சுமிநாராணயன், சிவா, அன்பழகன், பாஸ்கர் ஆகிய எம்.எல்.ஏ., க்கள் எழுந்து, கூட்டத்தில் இருக்க வேண்டிய திட்டத்தின் தலைவரான தலைமை செயலர் இல்லாமல் யாரிடம் நாங்கள் ஆலோசனை தெரிவிப்பது. இந்த கூட்டம் நடப்பதே வேஸ்ட் என, கூறி வெளிநடப்பு செய்வதாக கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.இதனிடையே தலைமை செயலர் கூட்டத்தில் பங்கேற்றார். அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்களும் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்று ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பியதுடன், பணிகளை விரைவில் துவங்க வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X