பொது செய்தி

தமிழ்நாடு

மண்டபத்தை மீட்டுத்தர வேண்டும்! கலெக்டரிடம், ஜீவா நகர் மக்கள் மனு

Added : பிப் 12, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர், ஜீவா நகர் வீட்டு உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள், கலெக்டரிடம் நேற்று கொடுத்த மனு:

ஆசர் மில் தொழிலாளர்கள் சங்கம், மில் தொழிலாளருக்கு, 1960 ல் துவங்கப்பட்டது; 1963ல், 112 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. வீட்டுக்கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆவணங்கள் உறுப்பினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கிய இடத்தில், கூட்டுறவு கடன் பெற்று, மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், செயல்படாத சங்கமென, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கலைத்துவிட்டார்.சங்கத்தை மீண்டும் இயக்க வேண்டுமென, பலமுறை கோரிக்கை வைத்து, சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தோம்.மூன்று மாதங்களுக்கும் பதில் அளிக்க உத்தரவிட்டும், இதுவரை பதில் இல்லை.

கிணற்றில் இருந்து மோட்டார் வைத்து, மேல்நிலை தொட்டி கட்டி, 15 ஆண்டுகளாக, ஜீவா நகர் மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகிறோம். இச்சூழலில், திருப்பூர் வட்ட கூட்டுறவு சங்க தலைவர் நீதிராஜன், மண்டபத்தின் பூட்டை உடைத்து, மண்டபத்தை ஆக்கிரமித்துள்ளார். அன்னதான மண்டபத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X