பொது செய்தி

தமிழ்நாடு

ரோஜா பூக்கள் வரத்து சரிவு விலை உயர வாய்ப்பு

Added : பிப் 12, 2020
Advertisement
 ரோஜா பூக்கள் வரத்து சரிவு விலை உயர வாய்ப்பு

திருப்பூர்:காதலர் தினத்தை முன் னிட்டு, திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு ரோஜா பூக்கள் வரத்து குறைந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு ஒசூரில் இருந்து டன் கணக்கில் ரோஜா பூ தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு ஒரு டன் ரோஜா தினமும் வரத்தாக இருக்கும். வழக்கமாக, 12 ரோஜாக்கள் கொண்ட ஒரு கட்டின் விலை (தரத்துக்கு ஏற்ப) 80 முதல், 150 ரூபாயாக இருக்கும்.நாளை மறுதினம் (14ம் தேதி) காதலர் தினத்தை ஒட்டி, ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், பிற மார்க்கெட்டுக்கு பூ அனுப்புவது குறைந்துள்ளது.

திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு பூ வரத்து குறைந்ததால், 800 கிலோ ரோஜாக்கள் மட்டுமே நேற்று வந்தன.இன்றும், நாளையும் பூ வரத்து குறையும் பட்சத்தில், காதலர் தினத்தன்று பூ விலை உயர வாய்ப்புள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.ஒரு கிலோ மல்லிகை பூ, 480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சீசன் இல்லாதால், முல்லைப்பூ இரண்டு கிலோவுக்கு குறைவாகவே வருகிறது. ஒரு கிலோ, ஆயிரம் ரூபாய்க்கு முல்லையும், ஜாதிமுல்லை, 400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X