மோதலில் போலீஸ் மீது கல்வீச்சு 4 பேர் படுகாயம்: 8 பேர் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

காரைக்கால்:கோஷ்டி மோதலை தடுக்க முயன்ற போலீசாரை கற்களை வீசி தாக்கிய சம்பவம் தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் அடுத்த விழிதியூரை சேர்ந்தவர்கள் சுதாகர், சிலம்பரசன். இவர்களுக்குள் முன்விரோதம் உள்ளது. . இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு சுதாகரின் நண்பர் செல்வமணி, அதேபகுதியில் உள்ள பாரில், மது அருந்தியபோது பாட்டிலை உடைத்தார். அதனை கண்டித்த பார் ஊழியர் செல்வராஜியிடம் தகராறு செய்தார். அங்கிருந்த சிலம்பரசனின் ஆதரவாளரான தென்னரசு, செல்வமணியை சமாதானம் செய்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து சுதாகர் மற்றும் சிலம்பரசன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு, சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். தகவலறிந்த நிரவி போலீசார் விரைந்து சென்று மோதலை தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்பினரும் சரமாரியாக கற்களை வீசியதில், உதவி சப் இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், போலீசார்கள் கலியமூர்த்தி, சூர்யா, எழிலரசி ஆகியோர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.மோதல் தொடர்பாக சுதாகர் மற்றும் சிலம்பரசன் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், போலீசாரை கற்களை வீசி தாக்கிய சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 50 பேர் மீது வழக்கு பதிந்து ராஜகுரு, மகேந்திரன், ரமேஷ், ராமலிங்கம், ராஜேஷ், சங்கர நாராயணன், பார்த்திபன், சிலம்புசெல்வம் ஆகிய 8 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X