முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டி: பள்ளி, மாணவ, மாணவியர் அபாரம்

Added : பிப் 12, 2020
Advertisement
 முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டி: பள்ளி, மாணவ, மாணவியர் அபாரம்

அவிநாசி:முதல்வர் கோப்பைக் கான, மாவட்ட அளவிலான தடகள போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் பரிசுகளைப் பெற்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் பிரிவு சார்பில், முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான தடகள போட்டி, அவிநாசி - பழங்கரையிலுள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளியில் நடந்தது.

இதில், 100 மீ. ஓட்டத்தில், வைசாலி (எஸ்.டி.ஏ.டி.,) முதலிடம், காவியா (விவேகானந்தா அகாடமி), இரண்டாமிடம், தர்ஷினி ஸ்ரீ., (ஏ.வி.பி.., பள்ளி) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், சுகாசினி (கொங்குநாடு கல்லுாரி), கிருஷ்ணவேணி (திருப்பூர் குமரன் கல்லுாரி), மதுமிதா (திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி), ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

அடுத்து, 800 மீ., ஓட்டத்தில், ஸ்ரீவர்தினி (சென்சுரி பள்ளி), வர்ஷிதா (ஜெய்வாபாய் பள்ளி), புவனேஸ்வரி (அனுப்பர்பாளையம் பள்ளி), 1500 மீ., ஓட்டத்தில், யசோதா (ஹோப் ஸ்டார்ஸ் கிளப்), அபிநயா (அனுப்பர்பாளையம் பள்ளி), ரக் ஷனா (பெரியாயிபாளையம், அரசுப்பள்ளி) முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.ஐந்தாயிரம் மீ.,ஓட்டத்தில், சுவேதா, அகிலாண்டேஸ்வரி, ஆர்த்தி, 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், ஜெயா ரோஸ், அபிநயஸ்ரீ, மிருதன்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

நீளம் தாண்டுதலில், பிரவீனா, அஞ்சலி சில்வியா, மிருதுளா, ஹம்மர் த்ரோ விளையாட்டில், மீனா, தனுஷ்யா, பிரவீனா, ஈட்டி எறிதலில், மதுமிதா சிவரஞ்சனி, ஸ்ரீநிதி ஆகியோர் முதல் மூன்று இடங்களை தக்க வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X