பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் துறையில் வேலை முகாமில் பங்கேற்க அழைப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

திருப்பூர்:தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், குன்னத்துாரில், 15ம் தேதி நடக்கிறது.

குன்னத்துார், என்.ஆர்.கே.என்., உயர்நிலை பள்ளியில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. தொழிற்கல்வி, பட்டப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெறலாம். 'தீன்தயாள் உபாத்யாயா கிராமின் சவுசல் யோஜனா' திட்டத்தில், இலவச பயிற்சி பெறவும் விண்ணப்பிக்கலாம்.

'பயோடேட்டா', கல்விச்சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன், முகாமில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 0421 2971149 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X