பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் சிக்னல் அமைக்க திட்டம்; துணை கமிஷனர்

Added : பிப் 12, 2020
Advertisement
 கூடுதல் சிக்னல் அமைக்க திட்டம்; துணை கமிஷனர்

திருப்பூர்:'திருப்பூரில், போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக, 14 சிக்னல்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக,' போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்தார்.

'விபத்தில்லா திருப்பூர்' உருவாக்கும் வகையில், மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்டமாக, பூலுவப்பட்டி அருகேயுள்ள அம்மன் திருமண மண்டபத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர் பத்ரிநாராயணன், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ உரிமையாளர், டிரைவர்கள் பங்கேற்றனர்.

கமிஷனர் பேசுகையில், 'திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. அதிகளவில் ஆட்டோக்களும் ஓடுகின்றன. ஆட்டோ டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். சந்தேகப்படும்படியான நபர் குறித்து தெரிந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்,' என்றார்.

'விபத்தில்லா திருப்பூர்'

திட்டம் குறித்து துணை கமிஷனர் பத்ரி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: போலீசாருக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனை நடக்கும். அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்கப்படும்.வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போலீசார் இணைந்து, ஆட்டோக்களுக்கு 'ஸ்டிக்கர்' வழங்க திட்டமிட்டுள்ளோம்.

சிறந்து விளங்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு கவுரவிக்கப்படுவார்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓடும் ஆட்டோ மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நகரில், 20 சிக்னல்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை குறைக்க மற்றும் விபத்தை கட்டுப்படுத்த தண்ணீர்பந்தல், டி.கே.டி., மில் உள்ளிட்ட, 14 இடங்களில் கூடுதலாக சிக்னல்கள் அமைக்க உள்ளோம். இன்னும், இரண்டு மாதங்களுக்கு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X