தமிழ் சங்க தேர்தல்: அரசுக்கு பாதுகாப்பு குழு வலியுறுத்தல்

Added : பிப் 12, 2020
Advertisement

புதுச்சேரி:தமிழ்ச்சங்க தேர்தலை அரசே நடத்த வேண்டும் என, பாதுகாப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது:புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சி, தமிழ் பாதுகாப்பு போன்ற இலக்கியப் பணிகளுக்காக தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சமீப காலமாக இந்த சங்கப் பணிகளில் அரசியல், தனிநபர் புகழ்பாடுதல், முறைகேடான பணிகள் நடக்கிறது. குறிப்பாக விருது, பட்டங்கள் வழங்குவது, வெளிநாடுகளுக்கு செல்வது, வெளிநாடு வாழ் தமிழர்களை பாராட்டுவது, விழாக்கள் நடத்துவது ஆகியவற்றுடன் செயல்பாடு முடங்கிவிட்டது.சங்க விதிகளின் படி ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டப்படுவதில்லை. 2013 முதல் 2019 வரையில் இருமுறை மட்டுமே கூட்டப்பட்டது. மத்திய அரசின் சங்கங்கள் பதிவாளர் அலுவலகத்தில், 2013 முதல் 2019 வரை தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் சமர்ப்பிக்கப்படவில்லை. சங்கமும் புதுப்பிக்கப்படவில்லை. சங்க நிர்வாகிகள் விரும்புபவர்கள் வாழ்நாள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.கடந்த மூன்று ஆண்டுகளில் இச்சங்கம் பல்வேறு காரணங்களுக்காக கோர்ட் வழக்குகளை சந்தித்து வருகிறது. பொன்விழா மாநாட்டிற்கு முதல்வர் நிவாரண நிதி ரூ. 5 லட்சத்திற்கு கணக்கு காட்டப்படவில்லை.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சங்கத் தேர்தல் விதிமுறைகளை மீறி நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் நேர்மையாக நடக்க, அரசு தன் பொறுப்பில், பாதுகாப்புடன் தேர்தலை நடத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X