சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விளக்கில் எரிந்த தீயில் வீடு, கடை எரிந்து சாம்பல்

Added : பிப் 12, 2020
Advertisement
 விளக்கில் எரிந்த தீயில்  வீடு, கடை எரிந்து சாம்பல்

பல்லடம்:பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் சந்திரகுமார், 48. பந்தல் அமைப்பாளர். மனைவி ஸ்ரீதேவி, 43, மகன் ஜவஹர், மற்றும் மகள் சந்திரா ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

சந்திரகுமார், வீட்டிலேயே பந்தல் அமைப்பதற்கான பொருட்களை வைத்துள்ளார். நேற்று காலை, வீட்டில் யாரும் இல்லாதபோது, சுவாமி படத்துக்கு வைக்கப்பட்டிருந்த விளக்கின் தீயால், வீடு, கடை தீ பிடித்தது.பல்லடம் தீயணைப்புதுறை அலுவலர் ராகவன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதற்குள், வீடு கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இதில், ஸ்ரீதேவியின் பட்டப்படிப்பு சான்றுகள், மற்றும் குழந்தைகளின் பள்ளி சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டு அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. வீட்டு உபயோக பொருட்கள் பலவும் எரிந்து சேதமடைந்தன. காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X