பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு குழந்தைகள் நடத்திய சந்தை பொருள் வாங்கி ஊக்கமளித்த மக்கள்

Added : பிப் 12, 2020
Share
Advertisement
 சிறப்பு குழந்தைகள் நடத்திய சந்தை பொருள் வாங்கி ஊக்கமளித்த மக்கள்

திருப்பூர்:பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில், சாய்கிருபா பள்ளியில், அமுது மாதசந்தை நேற்று நடந்தது.

திருப்பூர் காந்தி நகரில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி, ஸ்ரீசாய் கிருபா பள்ளி செயல்படுகிறது. பள்ளியில், 150க்கும் அதிகமான சிறப்பு குழந்தைகள் பயின்று வருகின்றனர். அடிப்படை கல்வியுடன், பொதுமக்களுடன் ஒன்றி வாழ்வது குறித்தும்சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.சிறப்பு குழந்தைகள் நடத்தும், சிறிய மளிகை கடையும் பள்ளி வளாகத்தில் இயங்குகிறது.

மேலும், பயிற்சி பெற்ற குழந்தைகள், ஆசிரியர்கள் இணைந்து, உணவு பண்டங்கள் தயாரிக்கின்றனர்.குழந்தைகளுக்கு, விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'ஆர்கானிக்' பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.பண்ணையில் விளையும் காய்கறிகள், கீரை வகைகள், மக்களுக்கு விற்கப்படுகிறது.

பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில், பள்ளி நிர்வாகம் சார்பில், அமுது -மாதசந்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.முதன்முறையாக, அமுது மாதசந்தை நேற்று நடந்தது; கிட்ஸ் கிளப் பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், சந்தையை திறந்து வைத்தார். பள்ளியின் தாளாளர் கவின், சந்தை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மாணவர்களுக்கு உதவியாக, ஆசிரியர்களும் சந்தையில் இணைந்து நடத்தினர்.பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கருப்பட்டி, கீரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்சென்றனர். இதேபோல், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது செவ்வாய்க்கிழமை, அமுது மாத சந்தை நடக்குமென, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X