பெயிண்டர் மர்ம மரணம் கொலை வழக்காக மாற்றம்

Added : பிப் 12, 2020
Advertisement

பாகூர்:வயலில் பெயிண்டர் இறந்து கிடந்த வழக்கை, பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றம் செய்து குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.
பாகூர் அடுத்த குருவிநத்தம் பாரதி நகரை சேர்ந்தவர் பார்த்திபன்,32; பெயிண்டர். இவர் துாக்கணாம்பாக்கத்தை சேர்ந்த சுடர்விழி எனபவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லாத காரணத்தினால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக சுடர்விழி, கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்த பார்த்திபன் குடிக்க துவங்கினார்.கடந்த 4 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பார்த்திபன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடியபோது, குருவிநத்தம் -இரண்டாயிரவிளாகம் சாலையில் உள்ள வயலில் பார்த்திபன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.பாகூர் போலீசார், பார்த்திபன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் பார்த்திபனின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சம்பவத்தன்று பார்த்திபனும், அவரது நண்பர் சூர்யா,21; மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சூர்யா,பார்த்திபனின் கழுத்தில் காலை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் ஏற்கனவே பதிந்த சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து, சூர்யாவை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X