மரக்கிளை முறிந்து விழுந்தது

Added : பிப் 12, 2020
Advertisement

புதுச்சேரி:மரக்கிளை முறிந்து விழுந்ததில், பைக்கில் சென்ற தந்தை மற்றும் அவரது மகளும் காயமடைந்தனர்.
புதுச்சேரி, குருமாம்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ்,40; இவர் நேற்று இரவு 8;00 மணி அளவில், தனது மகள் சுபஸ்ரீ,12, அழைத்துக் கொண்டு பைக்கில், சண்முகாபுரத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். அய்யங்குட்டிப்பாளையம் அருகே, சாலையோரம் இருந்த மரத்தின் கிளை திடீரென முறிந்து, பைக் மீது விழுந்தது.அதில் மரக்கிளை அடியில் ரமேஷ் மற்றும் அவரது மகள் சுபஸ்ரீ சிக்கி காயமடைந்தனர். அவர்களை, அங்கிருந்த மக்கள் காப்பாற்றி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்தபின் மேல் சிகிச்சைக்காக இருவரும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மரம் முறிந்து விழுந்ததால், வழுதாவூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கோரிமேடு தீ அணைப்பு படையினர், மரக்கிளையை வெட்டி அகற்றிய பிறகே போக்குவரத்து சீரானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X