காதலனை திருமணம் செய்த இளம்பெண் துாக்குபோட்டு தற்கொலை

Added : பிப் 12, 2020
Advertisement

புதுச்சேரி:வீட்டிலிருந்து வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட இளம்பெண், 3 மாதத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.புதுச்சேரி, லாஸ்பேட்டை, அசோக் நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ஜமுனா, 18. கடந்தாண்டு ஜூன் மாதம், சாரம் கவிக்குயில் நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்த அருள், 21, அண்ணாதுரையை சந்தித்து, அவரது மகள் ஜமுனாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுத்த அண்ணாதுரையை, கொலை செய்து விடுவேன் என அருள் மிரட்டல் விடுத்துள்ளார். அதனால் ஜமுனாவை, விழுப்புரத்தில் உள்ள தனது தங்கை விமலாதேவி வீட்டில் தங்க வைத்திருந்தார். அருள், மொபைல்போன் மூலம் விமலாதேவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், 18 வயது பூர்த்தியானதும், ஜமுனா வீட்டிலிருந்து வெளியேறி அருளை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விழுப்புரம் போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேசினர். ஜமுனா, விருப்பத்துடன் அருளை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.அதன்பிறகு, ஜமுனாவிடம் பேசுவதை அண்ணாதுரை குடும்பத்தினர் நிறுத்தியுள்ளனர்.இந்நிலையில், சாரம், வெங்கடேஸ்வரா நகர், சேரன் வீதியில் வசித்து வந்த ஜமுனா - அருள் இடையே நேற்று முன்தினம் இரவு குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. ஜமுனா துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கோரிமேடு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமான 3 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X