சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

Added : பிப் 12, 2020
Advertisement

பொங்கலுார்:பொங்கலுார் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் மூழ்கி, தொழிலாளி பலியானார். பொங்கலூர், குள்ளம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் வீராச்சாமி, 30. தொழிலாளி. இவர் தன் அண்ணன் சீனு மற்றும் அவருடைய நண்பருடன் குள்ளம்பாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குளிப்பதற்காக நேற்று சென்றார்.

அவரை தண்ணீர் இழுத்து சென்றது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீராச்சாமியை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து, காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின், ஒரு கி.மீ., துாரத்தில் வாய்க்காலில் இருந்து அவரது சடலத்தை போலீசார் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X