உணவூட்டு தொகை நிலுவை சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவூட்டு தொகை நிலுவை சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2020
Share
 உணவூட்டு தொகை நிலுவை சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:நான்கு மாத கால உணவூட்டு தொகையை வழங்கக் கோரி, சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்பாட்டம் நடந்தது. சங்க மாநகர தலைவர் மகேந்திரபூபதி தலைமை வகித்தார். இதில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 136 சத்துணவு மையங்களுக்கு, கடந்த 2019 அக்., முதல், 2020 ஜன., மாதம் வரை உணவூட்டு செலவினத் தொகை வழங்கவில்லை.

நிலுவையில் உள்ள நான்கு மாத கால தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கத்தின் மாநகர செயலாளர் ஆதிலட்சுமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கியம் ஆகியோர் உட்பட பலர், கோரிக்கையை விளக்கி பேசினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X