பொது செய்தி

தமிழ்நாடு

காவேரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிறப்பு பிரிவு

Added : பிப் 12, 2020
Advertisement
 காவேரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிறப்பு பிரிவு

காரைக்குடி:காரைக்குடி காவேரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்க விழா நடந்தது.துணைவேந்தர் ராஜேந்திரன், திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் துவக்கிவைத்தனர். செயல் இயக்குனர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.

காரைக்குடி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பூர்ணிமா, ராஜ்குமார் மருத்துவ வசதி குறித்து விளக்கினர். தொடர்ந்து 6 ஆம் ஆண்டு நிறைவு விழா கண்ணதாசன்மணி மண்டபத்தில் நடந்தது. துணைவேந்தர் ராஜேந்திரன், தேவ கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டனர்.

காவேரி மருத்துவ குழும நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், செயல்இயக்குனர் டாக்டர் சலீம், மருத்துவ இயக்குனர் டாக்டர் ராதாசந்திரன்,முன்னிலை வகித்தனர்.ஜெம் ஆப் செட்டிநாடு அவார்டு, காரைக்குடிமகரிஷி வித்யா மந்திர் பள்ளி குழும தலைவர் சேதுராமனுக்கும்,சேம்ப ஆப் காமர்ஸ் மற்றும் தொழில் தலைவர்சாமிதிராவிடமணிக்கும், நேஷனல் கேட்டரிங் கல்லுாரி தாளாளர் சையதுக்கும் காவேரி மருத்துவ குழும நிர்வாக இயக்குநர்மணிவண்ணன் விருதுகளை வழங்கினார். மருத்துவ நிர்வாகி காமாட்சிசந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X