திருப்புவனம் ஒன்றியத்தில் சேதமான கிராமப்புற ரோடுகள்

Added : பிப் 12, 2020
Advertisement
 திருப்புவனம் ஒன்றியத்தில் சேதமான கிராமப்புற ரோடுகள்

திருப்புவனம்:திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற சாலைகள் போடும் பணி கிடப்பில் போடப்பட்டதால், ரோடுகள் சிதிலமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளின் கீழ் 152 கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமப்புற சாலைகள்பழுதடைந்து நடக்க கூட லாயக்கற்றதாக உள்ளன. கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கிராமப்புற சாலைகளில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே மெகா சைஸ் பள்ளங்களுடன் காட்சியளிக்கின்றன. ஒரு சில கிராமப்புற சாலைகளில்புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கற்கள் கொண்டு வந்து போட்டதுடன் சரி இன்று வரை பணிகள் துவக்கப்படவில்லை.மடப்புரம் அருகே தேளியில் இருந்து கணக்கன்குடி வரை புதிய சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டினர்.

கற்கள் கொட்டி ஓராண்டாகியும் ரோடு புதுப்பிக்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலரும் கற்கள் பெயர்ந்துள்ள சாலையில் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். சாலை பழுதடைந்து இருப்பதால் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வருவதில்லை, காயமடைந்தவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோரை சரக்கு வாகனங்களில் ஏற்றி திருப்புவனம் அழைத்து வருகின்றனர்.

பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுபோல மணலூரில் இருந்து ஜோதிபுரம் வரை சாலை அமைக்க ஓராண்டிற்கு முன் டெண்டர் விடப்பட்டு சாலைகள் தோண்டப்பட்டன. இன்று வரை பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. தார்ச்சாலை தரமற்றதாக அமைக்கப்படுகின்றன. ஒரு கி.மீ., தூரம் மட்டுமே தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தார்ச்சாலை தரமற்றதாக குண்டும் குழியுமாக உள்ளது. பல இடங்களில் சாலைகள் மேடு பள்ளங்களாக இருப்பதால் டூவீலர்கள் கூட செல்ல முடியவில்லை.

சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.சாலைகளின் அகலத்தை குறைத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் டூவீலர்கள் விலக கூட இடமின்றி தவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புற சாலைகள் தரமானதாகவும் விரைவாகவும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X