என்.சி.சி. மாணவர்கள்  பண்ணை  சுற்றுலா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.சி.சி. மாணவர்கள்  பண்ணை  சுற்றுலா 

Added : பிப் 12, 2020
Share

தேவகோட்டை:தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி என்.சி.சி.மாணவர்கள் தேவகோட்டை அரசு தோட்டக்கலை பண்ணையில் வேளாண் பயிற்சி சுற்றுலா சென்றனர்.

பண்ணையில் கன்றுகள் வளர்த்தல், மற்றும் அது தொடர்பான பணிகளை பார்வையிட்டனர். விழாவிற்கு கல்லுாரி முதல்வர் சிந்தாமணி வஸ்திராணி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பேபி முன்னிலை வகித்தார். எஸ்.ஐ. மருது, எஸ்.எஸ்.ஐ.க்கள் அமல்ராஜ், தனசேகரன் பங்கேற்றனர்.

தோட்டக்கலை உதவி அலுவலர் வெங்கடேஷ், மாணவர்களுக்கு வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்தல், செடிகள் ஒட்டு வளர்த்தல், எதிர்காலத்தில் மாணவர்கள் அரசின் மானியங்களை பெற்று விவசாயத்தை பெருக்குவதற்கான வழிமுறைகள், உழவன் செயலி பற்றி விளக்கமளித்தனர், தோட்டக்கலை அலுவலர் ஓவியா நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X