பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் முதுநிலை மருத்துவபடிப்பு: தமிழக சுகாதாரத்துறை ஒப்புதல்

Added : பிப் 12, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழக சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி 2012- -13 ல் துவக்கப்பட்டது. இக்கல்லுாரியில் ஆண்டுக்கு 100 மாணவர்கள் வீதம் எம்.பி.பி.எஸ்., முடித்து செல்கின்றனர். இங்கு இளநிலை மருத்துவ பட்டம் பெறும் மாணவர்கள் உயர்கல்வி பெற, மதுரை, சென்னை போன்ற மருத்துவ கல்லுாரிகளுக்கு தான் செல்லவேண்டிய நிலை உள்ளது.

இதை தவிர்க்க சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு துவக்க வேண்டும் என மருத்துவ மாணவர்கள் அரசுக்கும், டீன் ரத்தினவேல் ஆகியோருக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.5 பிரிவுக்கு முதுநிலை பட்டம்: இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், மயக்கவியல் துறை ஆகிய 5 துறைகளுக்கும் முதுநிலை மருத்துவ பட்ட வகுப்பு துவக்கி, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என மாநில சுகாதாரத்துறைக்கு டீன் பரிந்துரை செய்தார்.

இக்கோரிக்கையை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை, இங்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை செய்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.முதுநிலை மாணவர் சேர்க்கை: சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி நிர்வாக அலுவலர் ஒருவர் கூறியதாவது, இங்கு முதுநிலை மருத்துவ பட்ட வகுப்பு துவக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அடுத்த படியாக இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் பெற வேண்டும்.

இதற்கான அடிப்படை வகுப்பறை, பேராசிரியர், மாணவர் தங்கும் விடுதி, மருத்துவமனை வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்வர். ஆய்வுக்கு பின் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) ஒப்புதல் அளிக்கும். 2020- -2021ம் கல்வி ஆண்டு முதல் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X