பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி-விருதுநகர் ரயிலில் கழிப்பறை வசதி: பயணிகள் கோரிக்கை

Added : பிப் 12, 2020
Advertisement

மானாமதுரை:திருச்சியிலிருந்து மானாமதுரை வழியாக விருதுநகர் செல்லும் டெமோ ரயிலில் கழிப்பறை வசதி ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, வழியாக விருதுநகருக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது,6 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் கழிப்பறை வசதி கிடையாது. விருதுநகரில் இருந்து அதிகாலை
கிளம்பும் ரயில் திருச்சி சென்றடைய மதியம் 12:00 மணி ஆகிறது. இதில் பயணம் செய்யும் பல தரப்பினர் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

ரயில் பயணிகள் கூறுகையில், இந்த ரயிலில் ஏராளமானோர் தினமும் பயணிக்கின்றனர். ஆனால் கழிப்பறை வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர், இதே போன்று இந்த வழியில் மன்னார்குடி செல்லும் டெமோ ரயிலில் முன்பு கழிப்பறை வசதி
இல்லாமல் இருந்தது,பயணிகளின் கோரிக்கையை அடுத்து தற்போது கழிப்பறை வசதியோடு ரயில் சென்று வருகின்றது,இந்த ரயிலிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X