பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்குகூடுதல் இடம் ஒதுக்க டி.ஆர்.ஓ., ஆய்வு

Added : பிப் 12, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு வழங்கிய 20 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்குமாறு கலெக்டரிடம், டீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கு, 2012 -- 13 ம் ஆண்டில் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டது. இதற்காக அப்போதிருந்த கலெக்டர் பங்கஜ்குமார் பன்சால், கல்லுாரி நிர்வாகத்திற்கு 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார். அதில் முதற் கட்டமாக மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி, மாணவர்கள் விடுதி, டாக்டர்கள் குடியிருப்புகள் கட்ட 30 ஏக்கர் ஒதுக்கினர்.

இந்த இடத்தில் தற்போது மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந் நிலையில், இங்கு கூடுதலாக முதுநிலை மருத்துவ படிப்பு, நர்சிங் உட்பட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளை துவக்க வேண்டும் என டீன் ரத்தினவேல், தமிழக சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி இங்கு மருத்துவ துணை படிப்புகளை துவக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள அரசு ஒப்புதல் அளித்தது.

இதற்காக, மருத்துவமனைக்கென ஒதுக்கிய 50 ஏக்கர் நிலத்தில், தற்போதுள்ள 30 ஏக்கர் இடம் போக, எஞ்சிய 20 ஏக்கர் நிலத்தை முழுமையாக மருத்துவ கல்லுாரி நிர்வாகத்திற்கு வழங்கினால் தான் கட்டுமான பணிகளை துவக்க முடியும் என கலெக்டர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, எஞ்சிய 20 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர் செல்வகுமாரி, தாசில்தார் மைலாவதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர் மீனா, உதவி மருத்துவ அலுவலர் முகமது ரபி உட்பட மருத்துவ கல்லுாரி நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X