திருப்புவனம் வாரச்சந்தையில் செவ்வாய் தோறும் தொடர் பிரச்னை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : பிப் 12, 2020
Advertisement
 திருப்புவனம் வாரச்சந்தையில் செவ்வாய் தோறும் தொடர் பிரச்னை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்புவனம்:திருப்புவனத்தில் ரோட்டில் நடக்கும் சந்தையால் பொதுமக்கள் படும் சிரமம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

திருப்புவனத்தில் சிவகங்கை ரோட்டில் நடைபெறும் வாரச்சந்தையால் பொதுமக்கள் படும் சிரமங்களால் புதிய இடத்திற்கு வாரச்சந்தை மாற்றப்பட்டு நடந்து வந்தது. புதிய இடத்திற்கு சந்தை மாற்றம் செய்யப்பட்டதால் அரசு இடத்திற்கு சட்டவிரோதமாக வாடகை வசூலித்து வந்த சிலர் பாதிக்கப்பட்டனர்,

புதிய இடத்தில் சந்தை நடைபெற பல்வேறு இடையூறு ஏற்படுத்தப்பட்டு கடந்த 6 மாதங்களாக மீண்டும் ரோட்டிலேயே சந்தை நடந்து வருகிறது.வாரம்தோறும் செவ்வாய்கிழமை ரோட்டிலேயே சந்தை நடைபெறுவதால் பள்ளி, கல்லுாரி செல்லும் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலீசார் இருந்தும் ரோட்டிலேயே வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதால் வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சிவகங்கை, மேலுரில் இருந்து வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் வர முடியாமல் சிக்கி தவிக்கின்றன. தினசரி சந்தைக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும், வியாபாரிகளும் விபத்திற்குள்ளாகி காயமடைந்து வருகின்றனர்.ரோட்டிலேயே மற்ற கடைகளுக்கு முன்னால் சிறு வியாபாரிகள் கடைகள் அமைப்பதால் இருதரப்பினருக்கும தகராறு நிகழ்ந்து வருகிறது.

வாரம்தோறும் செவ்வாய்கிழமை நிகழும் போக்குவரத்து இடையூறு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.புதிய இடத்திற்கு வாரச்சந்தையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

புதிய இடத்திற்கு சந்தையை மாற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் தகவல் பரப்பி வருகின்றனர். ரோட்டில் நடக்கும் சந்தையால் ஏற்படும் இடையூறு குறித்து படங்களுடன் வலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X