பொது செய்தி

தமிழ்நாடு

தனிப்பிரிவு எஸ்.ஐ., பணியிடம் காலி தலைமைக்கு தகவல் செல்வதில் சிக்கல்

Added : பிப் 12, 2020
Advertisement

மரக்காணம்:கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் இல்லாததால், குற்ற சம்பவ, தகவல்கள் மாவட்ட தனிப்பிரிவுக்கு தெரியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில், மரக்காணம், கிளியனுார், ஆரோவில், வானுார், கோட்டக்குப்பம் மற்றும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. ஒவ்வெரு காவல் நிலையத்திலும் ஒரு தனிப்பிரிவு ஏட்டுக்கள் உள்ளனர்.காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் செயல்பாடுகள் குறித்தும், குற்ற சம்பவங்கள் குறித்தும், பிற பகுதிகளில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தகவல்களை தனிப்பிரிவு ஏட்டுக்கள் சேகரித்து, உட்கோட்ட தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டரிடம் தெரிவிப்பார்கள். தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தகவல்களை ஒரு முறை சரிபார்த்து மாவட்ட தனிப்பிரிவிற்கு தகவல்களை தனி அறிக்கையாகவே அல்லது தொலைபேசி வழியாகவே தெரிவிப்பார்.
இந்நிலையில், கோட்டக்குப்பம் உட்கோட்ட தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கடந்தாண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். இது நாள்வரை அந்த பொறுப்பிற்கு சப் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யாமல் காலியாக உள்ளது. இதனால் காவல் நிலையங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி தனிப்பிரிவு ஏட்டுக்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தகவல்களை மாவட்ட தனிப்பிரிவுக்கு அனுப்பி வருகின்றனர்.இதனால் முக்கிய சம்பவங்கள் மாவட்ட தனிப்பிரிவுக்கு தெரியாமல் போகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X