பொது செய்தி

தமிழ்நாடு

காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை

Added : பிப் 12, 2020
Advertisement
 காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை

விக்கிரவாண்டி;விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு ஆண்கள் 572 பேர், பெண்கள் 243 பேர் என மொத்தம் 875 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் ஆண்கள் 572 பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை பதிவும் செய்யப்பட்டது.இதையடுத்து நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த உடல் தகுதி மருத்துவ பரிசோதனைக்கு கல்லுாரி டீன் டாக்டர் குந்தவி தேவி தலைமையில் ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார் முன்னிலையில் ஆண்களுக்கான மருத்துவ பரிசோதனை நடந்தது.பரிசோதனையில் ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, எக்ஸ்ரே, பார்வைத்திறன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை நடந்தது. நேற்று முதல், தினமும் தலா 115 பேர் வீதம் மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிட்டு பரிசோதனை நடந்தது. வரும் 19ம் தேதி வரை பரிசோதனை நடைபெறுகிறது.மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுப்ரமணியன், ஆர்.எம்.ஓ., டாக்டர் சாந்தி, டாக்டர்கள் அறிவழகன், சுதாகர், சம்பத், அஞ்சன் ராமச்சந்திரநாத், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், லேப் டெக்னீஷியன்கள், செவிலியர் உட்பட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X