தமிழ்நாடு

ஏமாற்றம்: கானல் நீராக மாறிய ரயில்வே பாதை: திருப்பத்தூரில் நிறைவேறாத ஆய்வுகள்

Added : பிப் 12, 2020
Advertisement

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வழியாக புதிய ரயில்பாதை திட்டம் குறித்து இந்த ஆண்டும் அறிவிப்பு இல்லாததால் திருப்புத்துார் வழியாக ரயில்பாதை அமைப்பது கானல் நீராக மாறிவிட்டது.

திருப்புத்துார் தமிழகத்தின் தென்மாவட்டங்களையும் வடமாவட்டங்களுக்குமான மத்தியில் உள்ள போக்குவரத்து மையமாகும். வாகனப் போக்குவரத்துதிருப்புத்துார் வழியாக அதிகரித்து வரும் நிலையில், ரயில் போக்குவரத்தும் ஏற்படுத்த பொது மக்கள்,வணிகத்துறையினர் நீண்ட காலமாககோரி வருகின்றனர்.

அதற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடி -- திருப்புத்துார் -- துாத்துக்குடி, காரைக்குடி -- திருப்புத்துார்- - மதுரை, காரைக்குடி --திருப்புத்துார்--திண்டுக்கல்ஆகிய 3 வழித்தடங்களில் புதிய ரயில்பாதை அமைக்க ஆய்விற்காக நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வு துவங்கியது. மதுரை--தஞ்சாவூர் நேரடி ரயில்பாதை திருப்புத்துார் வழியாக அமைக்கவும் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

புதிய திட்டங்களுக்கு நடந்த ஆய்வு முடிவில் துாத்துக்குடி, மதுரை செல்லும் வழித்தடங்களில் போதிய வருமானம் கிடைக்காது என்று ரயில்வே கைகழுவியது. காரைக்குடி--திண்டுக்கல் ரயில்பாதை ஆய்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் புதிய ரயில் பாதை ஆய்வு குறித்து ஏதும் வெளியாகவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி காலம் துவங்கி இது வரை ஆய்வுகள் நடத்தப்பட்டனவே தவிரபுதிய பாதை அமைக்கப்படவில்லை. ஆனால் போக்குவரத்து அவசியம் கருதி ரோடுகள் மட்டும் அறிவிக்கப்பட்டு நிறைவேற்ற துவங்கியுள்ளனர்.

மானாமதுரை--பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலை, மதுரை--தஞ்சாவூர் பசுமை வழிச்சாலை, மதுரை -காரைக்குடி நேரடி வழி, திண்டுக்கல்--காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை திருப்புத்துார் வழியாக 4வழி,2 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. திருப்புத்துார் பகுதியில் கேட்காமலேயே சாலை வசதிகள் அதிகரித்தும் கேட்டரயில்பாதை மட்டும் கானல் நீராகவே உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X