திருநங்கைகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

Added : பிப் 12, 2020
Share

விழுப்புரம்:இரண்டாம் நிலை காவலர் தேர்வில், தேர்வான திருநங்கைகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை சரிபார்ப்பு பதிவு நடந்தது.
தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால், இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு முடிந்து, உடல் தகுதி மற்றும் திறன் தேர்வு நடந்தது.இத்தேர்வுகளில், தேர்வான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு நேற்று முன்தினம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை பதிவு நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று ஒரு திருநங்கை உட்பட 242 பெண்களுக்கு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை பதிவு நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X