பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்வம்! தி.மு.க.,வில் பதவி பெற இளைஞர்கள்...மாவட்டத்தை இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

தி.மு.க., உட்கட்சித் தேர்தலில் பதவியைப் பெற இளைஞர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கட்சி வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கு பதவி வழங்கிடவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமெனவும் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தி.மு.க., உட்கட்சித் தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. முதல்கட்டமாக கிளைக் கழகங்களுக்கும் அதனைத் தொடர்ந்து பேரூர், ஒன்றியம், நகராட்சி, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது.தி.மு.க.,வில் விழுப்புரம் மாவட்டத்தை வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. கட்சி அமைப்பு ரீதியாக தற்போது வரை விழுப்புரம் தெற்கு மாவட்டமாக இப்பகுதி உள்ளது. இதன் மாவட்ட செயலராக முன்னாள் எம்.எல்.ஏ., அங்கயற்கண்ணி உள்ளார்.புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் ஆகிய 3 தொகுதிகள் தி.மு.க., வசம் உள்ளது.அதேபோன்று கடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்றது. பு
திய மாவட்டம் பிரிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பதவியைப் பிடிக்க தி.மு.க., நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மாவட்ட செயலர் அங்கையற்கண்ணி, சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன் ஆகியோர் ஒரு அணியாகவும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
அங்கயற்கண்ணி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆதரவாளராகவும், வசந்தம் கார்த்திகேயன் முன்னாள் அமைச்சர் வேலு ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட செயலர் பதவியைப் பிடிக்க எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார்.தற்போதுள்ள ஒன்றிய செயலர் பலரை தனது ஆதரவாளர்களாக வைத்துள்ளார். இவர்களின் போட்டியால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், தி.மு.க.,வின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதவியை பிடிப்பதில் கட்சியினரிடையே கடும் போட்டியை நிலவும் என்பதில் சந்தேகமில்லை.தொடர்ந்து பல ஆண்டுகளாக வயதில் மூத்தவர்களே நிர்வாகிகளாக செயல்பட்டு வருவது இளைஞர்களுக்கு மன சோர்வை ஏற்படுத்தியுள்ளது. மூத்த நிர்வாகிகள் பலர் இளைஞர்களுக்கு வழி விடாமல் தொடர்ந்து தங்களை முன்னிலைப்படுத்தியே கட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.இது கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. கட்சி வளர்ச்சிக்கு உண்மையாக உழைத்து பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பலர் விரக்தி அடைந்து மாற்றுக் கட்சிக்கு தாவும் நிலையும் நடந்து வருகிறது.மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பெறவும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவும் இளைஞர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கட்சி அமைப்பு ரீதியாக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். இலன் மூலம் பலருக்கு பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.அதேபோல் இரு அணியாக செயல்படும் நிலைமாறி கட்சி வளர்ச்சி பெறும் என கருதுகின்றனர். இதன் காரணமாக பதவியை பெற முடியும் என்ற எதிர்பார்ப்புடன் உட்கட்சி தேர்தலை கள்ளக்குறிச்சி மாவட்ட உடன்பிறப்புக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
---நமது நிருபர்--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X